Tuesday, April 6, 2010

மறதிக்காரனின் தேடல் பாதைகள்

துமிகளுக்குள் திரிந்திடும்
கனவின் பேய்கள் பிடுங்கியோடுகிறது
ஞாபகத்தின் நாடு நிசிக்குள்
என் ஆழ் துக்கங்களை ...

காமம் நிரம்பிடும்
கனவின் வியர்வைகளில்
உருக்கொள்கிறது
பயம் மற்றும் பயங்கள்....


இரவின் பாதைகளில்
சிதறிய எலும்புகளில்
கசியும் மாதக்குருதியால்
மறத்தல் பற்றிய குறிப்புகளைத் தேடியலைகிறேன்
மயானத்தின் மௌன ஜாமங்களுக்குள்...

முதல் ஜாமம்
*கசிந்திடும் பேனாவின் நீல ரேகைகளில்
* தொலைந்த துணைக் காலின் சுட்டு விரலில்
* கனவுகளழித்த ரப்பரில் படர்ந்த பிழைகளில்


நாடு ஜாமம்
* மூட்டைகள் பதுங்கும் உதிர்ந்த சுவரின் இடுக்குகளில்
* நசுக்கப்பட்ட பேண்களின் விரல் நகங்களில்
* பகலைக் கூறுபோடும் ஜன்னல் கம்பிகளின் இரவுகளில்

கடை ஜாமம்
* கிழிக்கப்பட்ட துணிகளில்
* இரண்டாம் நாள் குருதிக் கவளங்களில்

தோழி!
ஒவ்வொரு புணர்வின் உச்சத்திலும்
காணாமல் போய் விடுகிறது
நமது ஓர்மை

காமத்தின் தேடல்களில்
நாம்
கனவுகொள் பேய்களாகிறோம்.
ஆம்
காமம்கொள் பேய்களாகிறோம் .

2 comments:

  1. நண்பா, முதன்முறையாய் உமது பதிவை பார்வை இடுகிறேன். உம்முடைய வார்த்தைகள் அருமை. ஆனால், சொல்ல வரும் கருத்து தடுமாறி நிற்கிறது. கருத்துப் பிழைகளை சற்றே கவனித்தால், இன்னும் ஆழமாக உங்களால் எழுத முடியும். நன்றி.
    இரவின் பாதைகளில்
    சிதறிய எலும்புகளில்
    கசியும் மாதக்குருதியால்
    மறத்தல் பற்றிய குறிப்புகளைத் தேடியலைகிறேன்
    மயானத்தின் மௌன ஜாமங்களுக்குள்...

    முதல் ஜாமம்
    *கசிந்திடும் பேனாவின் நீல ரேகைகளில்
    * தொலைந்த துணைக் காலின் சுட்டு விரலில்
    * கனவுகளழித்த ரப்பரில் படர்ந்த பிழைகளில்


    நாடு ஜாமம்
    * மூட்டைகள் பதுங்கும் உதிர்ந்த சுவரின் இடுக்குகளில்
    * நசுக்கப்பட்ட பேண்களின் விரல் நகங்களில்
    * பகலைக் கூறுபோடும் ஜன்னல் கம்பிகளின் இரவுகளில்

    ReplyDelete
  2. உங்கள் சொல்லகராதியும், நடையும், படிமங்களும் நன்று. நாடு ஜாமம் என்பது நடு சாமமா? எழுத்துபிழையா ?

    ReplyDelete