Friday, February 26, 2010

பறத்தல் 2

புதன் கிழமையாகத்தான் இருந்திருக்க வேண்டும்
அன்று
வியாபாரிகளின் கதவுகளில் பூட்டுக்கள் மட்டுமே தொங்கிக்கொண்டிருந்தன
உச்சி வெய்யிலின் வெப்பத்தில்
தார் ரோடுகள் கருந்திரவமாகிக் கொண்டிருக்க
கொதிக்கும் திரவத்தில் வான் நோக்கிப் படுத்திருப்பது
எங்களுக்கு வழக்கமானது தானென்றாலும்
அக்கணம்
நாங்கள் யாரும் யாருடனும்
பேசிக்கொள்ளவில்லை.
எங்களிடம் பேசுவதற்கும் ஒன்றுமில்லை.
அமைதியாக இருப்பதால்
நாங்கள் அனைவரும் அரசுக்கெதிரான
போராட்டத்தில் இருப்பதாகவோ அல்லது அரசின் அடிமைகள் என்றோ
தயவுசெய்து நம்பிவிடவேண்டாம்.
அரசோ
வியாபாரிகளின் குடும்பங்களில் தற்கொலை நிகழ்வது
தற்ச்செயலானது தானென்று அறிவித்த காலமது.

அறிவிப்புகளை போலவே வானில் பறந்த அவைகளை
முதலில் தற்கொலை செய்து கொண்டவர்களின்
கனவுகள் என்று தான் நினைத்திருந்தேன்
உண்மை அதுவல்ல நண்பர்களே !
நான் கூறும் உண்மை
உங்களுக்கு விசித்திரமாகத்தான் இருக்கும்.
ஆம்
அவைகள் இரண்டுமே அழகான பறவைகள்.
மேலும்
இப்பொழுது எனது வார்த்தைகள்
உங்களது அவநம்பிக்கையை அதிகரிக்கவே செய்யும்,
ஏனெனில்
பறந்து செல்பவைகளில் ஒன்று ..........................................
.............................................................................................................
.............................................................................................................
.............................................................................................................
நான்.
வெய்யிலின் உக்கிரமும்,வியாபாரிகளின் தற்கொலையும்
அதிகரிப்பது உண்மை போலவே
நான் சொல்வதும் உண்மை தான் நண்பர்களே!
வானில் பறந்த அந்த மற்றொன்று ............................................
.....................................................................................................................
........................அந்த மற்றொன்றும் ..................................................
.......................................................................................................நானே.
நண்பர்களே !
அடுத்து நான் கூர வருவதை
நீங்கள் நம்பாவிட்டாலும் பரவாயில்லை
அன்று
புதன் கிழமையே தான்.

Wednesday, February 24, 2010

பறத்தல்

நினைவு மறந்து
கனவில் கரைந்து
காற்றில் எதுவாகவோ பறந்தேன்
பறவைகள்
எப்போதும்போல்
பார்த்துக்கொண்டேதான் இருந்தது

Tuesday, February 23, 2010

வர்ணங்கள்

கனவுகளே நான்




குற்றம் பற்றிய உடல்







நான்

யாழி

கனவுகளின் வழித்தடங்களில் என் மூதாதையர்களை தேடி....