Tuesday, April 6, 2010

யாழி நிலம்

யாளி கூறும் புனைகதைகளால்
கை நழுவி
இமை மூடும் கணத்திற்குள்
உடைந்துவிடுகிறது என் வனம்.

பதறிய உணர்வில்
சிதறிய வனத்தை இரு கைகளாலும்
அள்ளி ஒன்று சேர்க்க
நீர் மருதுவின் தோல் சுருக்கங்கள்
வலது கையைக் கிழித்து
பெருந் தாகத்துடன் பருகுகிறது
அதனுயிர் குளிர எனதுயிரை.

கல்லோடையில் உருளும் பாறைகளில்
மாட்டிக்கொண்ட யாளிகள்
தனது கூர் நகங்களை தொலைத்திட
அவைகளை மெல்ல வருடி
வளர்ப்பு மிருகமென
எனது மடியில் வெப்பமூட்ட
தன் சிறகு விரித்து சட்டென பறந்து செல்கிறது

5 comments:

  1. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. யாதேனும் ஒரு வனம் அடையுமோ
    அந்த யாழி ..
    நல்லாயிருக்கு நண்பரே

    ReplyDelete
  3. கல்லோடையில் உருளும் பாறைகளில்
    மாட்டிக்கொண்ட யாளிகள்
    தனது கூர் நகங்களை தொலைத்திட
    அவைகளை மெல்ல வருடி
    வளர்ப்பு மிருகமென
    எனது மடியில் வெப்பமூட்ட
    தன் சிறகு விரித்து சட்டென பறந்து செல்கிறது
    https://www.youtube.com/edit?o=U&video_id=Thwnp_nfG5E

    ReplyDelete
  4. excellent post
    https://www.youtube.com/edit?o=U&video_id=lR-9f_sX4CE

    ReplyDelete